LocalNorth

ஹெலியில் சுற்றி வெள்ள இடரைப் பார்த்த ரணில்!

வடக்கு மாகாணத்தில் எற்பட்டுள்ள வெள்ள இடர் பாதிப்புக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹெலியில் சுற்றிப் பார்வையிட்டார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள இடர் தொடர்பான பாதிப்புக்கள் மற்றும் மக்களுக்கான இழப்பீடுகள் – உதவிகள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கிளிநொச்சிக்குச் சென்றார்.

பிரதமருடன் அமைச்சர்களான ரிஷாத் பதியூதீன், தயா கமகே, ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோரும் சென்றனர்.

இதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ள இடர் பாதித்த பகுதிகள் ஊடாக பிரதமர் வந்த ஹெலி பறந்தது. அதற்குள் இருந்தவாறே வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் பார்வையிட்டார்.

அதன் பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளுடனான முக்கிய கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading