World

பச்சை நிறமாகிய மாறிய வானம்: ‘உலகின் இறுதி நாள்’ எனப் புரளி!

அமெரிக்காவில் இரவு நேரத்தில் திடீரென வானம் மயில் பச்சை நிறத்துக்கு மாறியது. உலகின் இறுதி நாள் என பரவலாக பேசப்பட்டது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நேற்று இரவு நேரத்தில் திடீரென வானம் மயில் பச்சை நிறத்துக்கு மாறியது.

படங்களில் வருவதைப்போல காட்சியளித்த இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் சினிமா காட்சிகளுடன் ஒப்பிட்டு, வேற்று கிரக வாசிகளின் வருகையால் தான் இப்படி ஏற்படுகிறது என்ற புரளியை கிளப்பி விட்டுள்ளனர்.

ஒரு சிலர் இது உலகின் இறுதி நாள் என்று கருத்துக்களை பதிவிட்டனர்.

இந்தநிலையில் ஒரு டிரான்ஸ்பார்பர் வெடித்து சிதறியதன் விளைவாக ஏற்பட்ட தீயால் தான் வானம் திடீரென மயில் பச்சை நிறத்துக்கு மாறியதாக போலீஸ் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவி பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading