Sports

160 கோடி ரூபா வரிச் சலுகை கேட்டு மிரட்டுகின்றது ஐ.சி.சி.

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்தப் போட்டி தொடரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) இந்திய கிரிக்கெட் வாரியம் வரிச் சலுகை தரவேண்டும் என்று கோரியது.

இது தொடர்பாக கடந்த ஒக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் வரிச் சலுகை தொகை விரைவில் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை.

இந்நிலையில், வரி சலுகை தொகையான 160 கோடி ரூபாவை வரும் 30 ஆம் திகதிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியம் செலுத்த வேண்டும் என்று ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.

அப்படி செலுத்தாத பட்சத்தில் நடப்பாண்டில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்படும் வருவாயில் கழித்துக் கொள்ளப்படும் என்று ஐ.சி.சி. கூறியுள்ளது.

மேலும், இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கிண்ண மற்றும் 2023ஆம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி தொடர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading