Cinema

’90 எம்.எல்.’ எதிரொலி: ஓவியாவைக் கைதுசெய்! – பொலிஸில் புகார்

பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் நடித்துவிட்டு அதை பெஃமினிசம் என்று சொல்லும் நடிகை ஓவியாவை கைதுசெய்ய வேண்டும் என்று கூறி பிரபல அரசியல் கட்சி சென்னை பொலிஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டு பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்து கடந்த முதலாம் திகதி வெளியான படம் ’90 எம்.எல்.’ படம் இரட்டை அர்த்த வசனங்களைக் கொண்டு பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றது.

இந்நிலையில் இன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம், இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிர் அணியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

அதில், நடிகை ஓவியா நடித்துள்ள ’90 எம்.எல்.’ படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், அந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் ஓவியாவை கைதுசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading