LocalNorth

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் கொடூரமாக வெட்டிக்கொலை!

கிளிநொச்சி, உதயநகர் கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (வயது 32) என்பரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, வேப்பங்குளத்தைச் சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

உதயநகர் கிழக்கில் தங்கியிருக்கும் குறித்த நபர், இன்று காலை தனது அலுவலகப் பணிப்பாளருடன் அலுவலகத்துக்குப் புறப்படும்போதே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சரமாரியாக வெட்டியுள்ளார்.

தலை, கை, கால் மற்றும் உடம்பில் வெட்டுக்காயங்களுக்குள்ளான அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முன் உயிரிழந்துள்ளார்.

உறவினர் ஒருவரே வெட்டிக் கொலை செய்துள்ளார். வெட்டிய நபர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading