இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் தொழிற்பயிற்சிப் பிரிவான DIMO Academy ஆனது, நிறுவல்கள், வீடு பழுதுபார்ப்பு, பராமரிப்பு, காப்புறுதிச் சேவைகளை வழங்கும் முன்னணி HVAC (வெப்ப, தட்ப, காற்றோட்ட சேவை) நிறுவனமான HomeServe Germany உடன் அண்மையில் ஒரு சிறந்த கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்ற தகைமைகளைக் கொண்ட உள்நாட்டு இளைஞர்களுக்கு, ஜேர்மன் கட்டட சேவைத் துறையில் உறுதிப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் தொழிற்கல்வியை வலுப்படுத்துவதே இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாகும். இந்த கூட்டுறவின் கீழ், DIMO Academy ஆனது, ஜேர்மன் தொழில்சார் தரங்களின் அடிப்படையில் உலகத் தரம் வாய்ந்த தகுதியை வழங்கவுள்ளது. இது ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தினால் (AHK) அங்கீகாரம் பெற்ற தொழிற்சாலை பொறியியலில் ஜேர்மன் டிப்ளோமாவை பெறுவதற்கான வாய்ப்பிற்கு வழிவகுக்கும். ஜேர்மனியில் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக ஆரம்பிப்பதை உறுதி செய்வதற்காக, இப்பட்டதாரிகள் ஜேர்மன் மொழிப் பயிற்சியையும் பெறுவார்கள். இந்த பாடநெறி முழுமையடைந்ததும், சான்றுதலளிக்கப்பட்ட பட்டதாரிகள் HomeServe Germany இனால் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். இது ஜேர்மன் கட்டட சேவைத் துறையில் திறமையான நிபுணர்களாக மாறுவதற்கு அவர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதமளிக்கிறது. குறிப்பாக HVAC துறையில் வலுசக்தி செயற்றிறன், நிலைபேறான கட்டுமானம், நகரமயமாக்கல் ஆகிய விடயங்களால் வழி நடாத்தப்படும் திறன் வாய்ந்த கட்டட சேவை தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான உலகளாவிய தேவையை இந்த கூட்டாண்மை பூர்த்தி செய்கிறது. DIMO பேலியகொடையில் உள்ள அதி நவீன பயிற்சி நிலையத்திலும் முதலீடுகளை செய்துள்ளதோடு, 2025 பெப்ரவரியில் இது திறக்கப்படவுள்ளது. இந்த நிலையமானது விரிவான தொழில்நுட்ப வளங்களுடன் தொழிற்படவுள்ளதோடு, உள்ளூர் கட்டட சேவைகள் துறையை மேம்படுத்தும் அதே வேளையில், மாணவர்கள் உயர்ந்த சர்வதேச தரத்திற்கு பயிற்சியளிக்கப்படுவதையும் உறுதி செய்யும். இது பற்றி DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், குழுமத்தின் கல்விப் பிரிவின் தலைவருமான தில்ருக்ஷி குருகுலசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “DIMO Academy நிறுவகத்தின் Diplomas in Automobile Mechatronics and Plant
Read More
You must be logged in to post a comment.