Local

அமைச்சர் ரிஷாட்டின் சகாவின் வீட்டின்மீது குண்டுத்தாக்குதல்! பலகோணங்களில் விசாரணை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினர்  முகம்மட் பாயிசின் கொழும்பு, மட்டக்குளியிலுள்ள வீட்டின் மீது இன்று (12) அதிகாலை 2;30 மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் வீட்டின் பின் புறப்பகுதி சேதமடைந்துள்ளது. ஜன்னல் வழியாக வீட்டினுள் வீசப்பட்ட இக்குண்டினால்  மின் உபகரணங்கள் மற்றும் சில பொருட்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன.

சம்பவத்தை அறிந்து இன்று காலை பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், பாயிஸிடமிருந்து முறைப்பாடொன்றையும் பதிவு செய்தனர்.

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கருதப்படுவதுடன் இன்று காலை கொழும்பில் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் சில முக்கிய நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பின்  முக்கிய  அரசியல் பிரமுகர்கள் சிலர் பாயிஸின் வீட்டிற்கு சென்று நிலைமைகளை அறிந்து கொண்டனர்.

ஏற்கனவே மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாயிஸ் மீது இரண்டு முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அதிலிருந்து அவர்   மயிரிழையில் உயிர்தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading