Local

மொட்டில் இருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர்! – மஹிந்த திட்டவட்டம்; மைத்திரிக்கு ஆப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த வேட்பாளரே தமது தரப்பில் நிறுத்தப்படுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமது தரப்பில் போட்டியில் நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளர், நிச்சயமாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ்தான் போட்டியிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading