Local

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் வெடிகுண்டுகள் மீட்பு! – பலப்படுத்தப்பட்டது விமான நிலையப் பாதுகாப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகாமையில் உள்ள வீதியொன்றில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட இந்தக் குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட வெடிகுண்டுகளே இவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்குள் பயணிகள் தவிர்ந்த வேறும் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading