LocalSports

இலங்கைக் கிரிக்கெட் அணியில் வீரர்களை இணைக்க இலஞ்சம்! – விளையாட்டுத்துறை அமைச்சர் அதிர்ச்சி

இலங்கை கிரிக்கெட் அணியில் வீரர்களை இணைத்துக் கொள்வதற்குப் பலர் தனக்கு இலஞ்சம் வழங்க முன்வந்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதேவேளை, தனக்கு இலஞ்சம் வழங்க முன்வந்த சந்தர்ப்பம் தொடர்பில் தான் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழலுக்கு எதிரான பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்லிடம் கடந்த புதன்கிழமை முறைப்பாடு செய்தார் எனவும் அமைச்சர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இச்சம்பவம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழலுக்கு எதிரான பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்லிடம் முறையிட்டபோது அவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார். நானும் இதே அதிர்ச்சிக்குத்தான் உள்ளாகினேன்.

ஒரு நிமிடம் என்னை யாரோ ஆபத்தில் மாட்டிவிடப் பார்ப்பதாகவே நானும் எண்ணினேன். இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னர் எமது வரலாற்றில் இடம்பெற்றதேயில்லை” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading