Local

நாட்டில் மீண்டும் டெங்கு நோய்! 16 நாட்களில் 2000 பேர் இலக்கு!!

கடந்த 16 நாட்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளிகள்
அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக 625 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 499 நோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் 180 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளிகள் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர் என்று தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் சமூக சுகாதார விசேட நிபுணர் டாக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading