World

தமிழக அரசின் பட்ஜட்டை தாக்கல் செய்தார் பன்னீர்!

தமிழக சட்டப்பேரவையில் ஆண்டு தோறும் மார்ச் மாதத்தில் பட்ஜட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, தமிழக அரசின் பட்ஜட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் பட்ஜட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. காலை 10 மணிக்கு பேரவையில் பட்ஜட்டை துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யப்படுவதால், இந்தப் பட்ஜட் சலுகைகள் நிறைந்ததாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது.

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துள்ள நிலையில் குடிதண்ணீர்த் திட்டங்கள், விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் அதிக முக்கியத்துவம் பெறும் எனக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading