Local

மஹிந்தவின் வருகைக்கு எதிராக இந்தியாவில் இன்று ஆர்ப்பாட்டம்!

இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளதாவது:-

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு வருகை தந்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட பிரபல ஆங்கில நாளிதழ் பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை மஹிந்த ராஜபக்ச பெங்களூர் வந்தார்.

இதையறிந்த தமிழ் ஆர்வலர்களும், மே 17 இயக்கம் போன்ற அமைப்பினரும், ´கோ பேக் ராஜபக்ஷ´ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

இதுபற்றி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில்,

“குறிப்பிட்ட அந்தப் பத்திரிகை ஆசிரியர், தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் நடந்து வருபவர்.

இலங்கை அரசு செய்த கொடுமைகளை அவரது நாளிதழ்களில் வெளியிடுவதில்லை. இப்போது, மஹிந்த ராஜபக்சவை இந்திய மண்ணுக்கு அழைத்துள்ளமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading