Local

சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

சிகரெட்டுகள் மீதான உற்பத்தித் தீர்வை 60 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட கூறுகளுக்கு 2019 மார்ச் 06 ஆம் திகதியிலிருந்து 12 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதனால் ஒவ்வொரு தனிக்கூறுக்குமான விலையானது சராசரியாக ரூபா 5 இனால் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் 2019 ஜூன் 01 ஆம் திகதியிலிருந்து சிகரெட்டுகள் உற்பத்தி மீதான தேச கட்டுமான வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வருடாந்த பண வீக்கம் மற்றும் மொத்தத் தேசிய உற்பத்தி வளர்ச்சி என்பவற்றைக் கொண்டு ஆகக் குறைந்த வருடாந்த தீர்வை அதிகரிப்புடன் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு சிகரெட்டுகள் மீதான உற்பத்தித் தீர்வை விதிக்கப்படும்.

இது வருமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் செலவீனத்தையும் கட்டுப்படுத்தும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading