Jobs

Cinnamon Life ல் அமைந்துள்ள The Offices அலுவலக இட வசதிகள் முதலீட்டாளர்களை வெகுவாக ஈர்க்கின்றன

John Keells Properties நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள Cinnamon Life ல் அமைந்துள்ள The Offices அலுவலக இட வசதிகள் தற்போது கொழும்பில் வர்த்தகரீதியான ஆதனச் சந்தையில் புதிய தரஒப்பீட்டாக மாறியுள்ளது. இது நகரத்தில் உச்ச வாடகை வருமானங்களை ஈட்ட வழிவகுத்துள்ளன. வர்த்தகம், வாழ்வியல், மற்றும் இணைப்பு வசதிகள் போன்ற அனைத்து தேவைகளையும் சிறப்பாக ஒன்றிணைத்து வழங்கும் நிர்மாணச் செயற்திட்டங்கள் மத்தியில் அமைந்துள்ள உயர் வகுப்பு மற்றும் சிறந்த அமைவிடம் கொண்ட அலுவலக இட வசதிகளுக்கான கேள்வி அதிகரித்து வருவதை இது சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது.

 

கொழும்பின் மையப்பகுதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள Cinnamon Life, இலங்கையின் மிகப் பிரமாண்டமான ஒருங்கிணைந்த, கலப்புப் பயன்பாட்டு நிர்மாணச் செயற்திட்டம் என்ற ரீதியில் மிகவும் தனித்துவமான அலுவலகச் சூழல்களைக் கொண்டுள்ளது. Cinnamon Life ஹோட்டல் மற்றும் NUWA ஹோட்டல், Cinnamon Life ல் அமைந்துள்ள உயர் ரக அடுக்குமனைகளான The Residences, விற்பனை மையங்கள், உணவகங்கள், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட வசதிகளுக்கு இலகுவான இணைப்பு வசதிகளையும் இது கொண்டுள்ளது. அதன் காரணமாக, முன்னணி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பல்தேசிய நிறுவனங்கள் தமது அலுவலகங்களை அமைப்பதற்கான சிறந்த ஏற்பாட்டை இச்செயற்திட்டம் அவர்களுக்கு வழங்குகின்றது.

 

அலுவலக இட வசதிகளைக் கொண்டுள்ள கட்டடத் தொகுதி 10, 646 சதுர அடி பரப்பளவு கொண்ட விரிவான தள அமைப்புகளைைக் கொண்டுள்ளது. நவீன வர்த்தகச் சூழல்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்குப் புறம்பாக, உயர் தர உட்கட்டமைப்பு, தாரளமான வாகனத் தரிப்பிடம், நவீன கட்டட முகாமைத்துவத் தொகுதிகள், மற்றும் வசதிகள் அனைத்தும் தொழில்ரீதியாக நிர்வகிக்கப்படுதல் என ஏராளமான அனுகூலங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

 

John Keells Properties துறைத் தலைமை அதிகாரியும், John Keells Group நிறைவேற்று துணைத் தலைவருமான இனோக பெரேரா அவர்கள் இச்செயற்திட்டத்தின் மிகச் சிறந்த பெறுபேறுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில்:

“நகரத்தினுள் வணிகங்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற மற்றும் ஈடுபாடுகளை மேற்கொள்கின்ற வழிமுறைகளின் புதிய யுகமாக Cinnamon Life ல் அமைந்துள்ள The Offices திகழ்கின்றது. மாதாந்தம் சதுர அடி ஒன்றுக்கு 3 அமெரிக்க டொலர் மற்றும் வரிகள் (சதுர அடிக்கு சுமார் ரூபா 950 மற்றும் வரிகள்) என்ற அதிகூடிய வாடகை வருமான வீதங்கள் இந்த அலுவலக இட வசதிகளின் தரத்தைப் பிரதிபலிப்பது மாத்திரமன்றி, வர்த்தகம், வாழ்வியல், மற்றும் சர்வதேச இணைப்பு வசதிகள் என அனைத்தையும் ஒரே இடத்திலேயே வழங்குகின்ற, முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட நிர்மாணச் செயற்திட்டம் ஒன்று கொண்டுள்ள மதிப்பையும் காண்பிக்கின்றது. இந்த சூழல் கொண்டுள்ள நீண்ட கால அடிப்படையிலான அனுகூலங்களை இனங்கண்டுள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மத்தியிலிருந்து இதன் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை எம்மால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.”

 

Cinnamon Life ல் அமைந்துள்ள The Offices கொழும்பு நகரத்தினுள் தனித்துவமான இட வசதிகளை வழங்குவதுடன், இந்த அளவுக்கு பிரமாண்டமான மற்றும் அந்தஸ்து மிக்க நிர்மாணச் செயற்திட்டமொன்றில் அலுவலக இட வசதியைச் சொந்தமாக்கிக் கொள்ளும் அரிய வாய்ப்பினை முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றது. சந்தையில் அதி உயர்வான வாடகை வருமான மட்டங்களுடன், ஆண்டுக்கு 8% வரையான கவர்ச்சியான வாடகை வருமானங்களை ஈட்டும் வாய்ப்பினை முதலீட்டாளர்கள் கொண்டுள்ளனர். உயர் மட்ட வாடகை குடியிருப்பாளர்களின் கேள்வி மற்றும் ஒருங்கிணைந்த நிர்மாணச் செயற்திட்டத்தின் நீண்ட கால மதிப்பு ஆகியன அதற்குத் துணைபுரிகின்றன.

 

பிராந்திய ரீதியாக மிகச் சிறந்த வணிக மற்றும் வாழ்வியல் மையமாக கொழும்பு தொடர்ந்தும் வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில், City of Dreams Sri Lanka மற்றும் Cinnamon Life போன்ற நிர்மாணச் செயற்திட்டங்கள் நகர்ப்புற வர்த்தக ஆதனத்துறையில் திருப்புமுனையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. அவற்றில் அமைந்துள்ள அலுவலக இட வசதிகளுக்கான உயர் வாடகை வருமானங்கள் சந்தை மீதான நம்பிக்கை வளர்ச்சி கண்டு வருவதைப் பிரதிபலிப்பதுடன், சௌகரியம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றை வழங்குகின்ற, ஒருங்கிணைந்த, எதிர்காலத்திற்கு ஏற்ற பணிச் சூழலை நோக்கிய தெளிவான மாற்றமொன்றையும் காண்பிக்கின்றது.

 

பங்குச்சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் மிகப் பாரிய நிறுவனங்கள் குழுமமான John Keells Group ன் ஆதனத் துறை அங்கமாக John Keells Properties யங்கி வருகின்றது. Crescat City ல் அமைந்துள்ள Emperor மற்றும் Monarch, OnThree20, 7th Sense, TRI-ZEN, Cinnamon Life ல் அமைந்துள்ள The Residences, Viman Ja-Ela மற்றும் சமீபத்தைய நிர்மாணச் செயற்திட்டமான Vauxhall DSTRCT உள்ளிட்ட நாட்டில் உள்ள புகழ்பூத்த நிர்மாணச் செயற்திட்டங்கள் பலவற்றை நிர்மாணித்து சிறந்த சாதனைப் பதிவைக் கொண்டுள்ளது.  புத்தாக்கம், தரம், மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் மூலமாக நகர்ப்புற வாழ்வியல் மற்றும் வர்த்தக ஆதனத்துறையில் புதிய தராதரத்தை நிலைநாட்டி வருகின்றது.

 

City of Dreams Sri Lanka ல் கிடைக்கின்ற முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பான கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள தயவு செய்து www.johnkeellsproperties.com என்ற இணையத்தளத்தை நாடுங்கள் அல்லது 070 2 151 151 தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading