போர் நிறுத்தம் நீடிப்பு! டிரம்ப் அறிவிப்பு!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈரான் ஒரு ஒருங்கிணைந்த சமாதானத் திட்டத்தை முன்வைக்கும் வரை இந்த போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்து நீடிக்கும் என்றும், அமெரிக்க ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

You must be logged in to post a comment.