Local

சப்ரகமுவ பல்கலையில் பகிடிவதை! 54 மாணவர்களுக்கு வகுப்புத் தடை!!

பகிடிவதை சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54 மாணவ, மாணவிகளுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்தின் இரண்டாம் ஆண்டில் கற்கின்ற மாணவ, மாணவிகளுக்கே இந்த வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்தார்.

விவசாய பீடாதிபதிக்கு சில தினங்களாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைவாக நடத்தப்பட்ட விசாரணையின் பின் குறித்த மாணவர்களுக்கு ஒருவார கால வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பகிடிவதை சம்பவம் என்ற பெயரில் மாணவர்களை அடக்குவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சிப்பதாக அந்தப் பலகலைக்கழ மாணவர் ஒன்றிய தலைவர் நிஸ்ஸங்க கமகே கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading