LocalNorth

இராணுவ பவுசர் மோதியதில் மிருசுவிலில் பெண் படுகாயம்!

யாழ். கொடிகாமம், மிருசுவிலில் இராணுவ பவுசர் மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

சம்பவத்தையடுத்து இராணுவ பவுசர் வாகனம் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டதுடன், அதன் சாரதி கைதுசெய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர்.

படுகாயமடைந்த பெண், யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading