LocalNorth

யாழில் கத்திக்குத்து! இளைஞர் படுகாயம்!!

யாழ்ப்பாணம், தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் குடல் வெளிவரும் அளவுக்கு சரமாரியாகக் கத்திக் குத்துக்கு இலக்கான ஆண் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

கத்தி குத்துக்கு இலக்கானவர் முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் உடனடியாக அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading