LocalNorth

யாழ்.பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பு!

யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வகுப்புப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவனும் ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பல்கலைக்கழக நான்காம் வருட மாணவர்களால் சரமாரியாகத் தாக்கப்பட்டார்.

அவர் தலையில் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரியும் யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading