Local

ஞானசாரரின் தண்டனையை இடைநிறுத்துமாறு உத்தரவு!

பொதுபலசேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரருக்கு 6 மாதங்களில் அனுபவிக்கும் வகையில் வழங்கப்பட்ட ஒரு வருடக் கடூழியச் சிறைத்தண்டனையை இடைநிறுத்துமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் ஞானசார தேரருக்கு 6 மாதங்களில் நிறைவடையும் வகையில் ஒரு வருட கடூழியச் சிறைத்தண்டனையை விதித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தத் தண்டனைக்கு எதிராக ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி அவருடைய சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதன்படி மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை அறிவித்த ஹோமாகம நீதிமன்றம் இந்தத் தண்டனையை 5 வருடங்களுக்கு இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading