Cinema

பிரபல தமிழ் நடிகர் ‘அபி சரவணன்’ மீது நடிகை அதிதி மேனன் பொலிஸில் புகார்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘பட்டதாரி’ என்கிற படத்தில் நடித்த அபி சரவணன் மற்றும் அதிதி மேனன் ஆகியோர் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

பின்னர் தன் நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு அதிதி மேனன் சென்றுவிட்டார் என அபி சரவணன் பொலிஸில் புகார் அளித்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபி சரவணனை அதிதி மேனன் ஆட்கள் கடத்திவிட்டனர் என அபி சரவணனின் அப்பா பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், அதன்பின் பொலிஸ் நிலையத்தில் நேரில் ஆஜரான அபி சரவணன் தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறினார்.

தற்போது அதிதி மேனன் அளித்த புகாரில் தன் ஆவணங்களைத் திருடி அபி சரவணன் போலியாக திருமண சான்றிதழ் வாங்கி மிரட்டுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் காதலித்தது உண்மைதான். ஆனால், சேர்ந்து வாழவில்லை. அவரால் ஏமாற்றப்பட்ட பலர் என்னை எச்சரித்ததால் அவரிடம் இருந்து பிரிந்துவிட்டேன்.

தற்போது போலியாக கடத்தல் புகார் அளித்து எனக்கு சிக்கல் ஏற்படுத்தப் பார்க்கின்றனர்” எனப் பொலிஸிடம் தெரிவித்துள்ளார் அதிதி மேனன்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading