World

கணவரின் பாதுகாப்புப் பற்றி வருந்திய இராணுவ வீரரின் மனைவி தற்கொலை!

குஜராத்தில் தனது கணவரின் பாதுகாப்பு பற்றிய வருத்தத்தில் இராணுவ வீரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் பணியாற்றி வரும் இராணுவ வீரர் புபேந்திராசின்ஹ் ஜெத்வா.

இவரது மனைவி மீனாட்சி ஜெத்வா (வயது 22). குஜராத்தின் தேவபூமி துவாரகா நகரில் கம்பலியா பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இந்தத் தம்பதிக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

முன்பு ஒருமுறை பணியில் இருந்தபோது பனிப்புயலில் இருந்து தப்பி பிழைத்தது பற்றி தனது மனைவியிடம் ஜெத்வா கூறியுள்ளார். இந்தநிலையில் அவர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அவர் ஊரில் இருந்தபோது காஷ்மீரில் துணை இராணுவப் டையினர் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 40 பேர் பலியானது பற்றிய செய்தி வந்துள்ளது.

இந்நிலையில், விடுமுறை முடிந்து ஜெத்வா பணிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. இதனால் அவரது மனைவி அதிக வருத்தத்தில் இருந்துள்ளார். தனது கணவர் காஷ்மீர் திரும்புவதில் அவருக்கு விருப்பமில்லை.

ஜெத்வாவின் பாதுகாப்பு பற்றிய வருத்தத்தில் இருந்த அவரின் மனைவி வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading