World

பாரத ரத்னா விருது பெறும் பிரணாப் முகர்ஜிக்கு மோடி வாழ்த்து!

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“நமது காலத்தின் சிறந்த அரசியல்வாதி பிரணாப் முகர்ஜி” எனப் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் இந்த வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் குடியரசுத் தின விழா இன்று 26ஆம் திகதி கொண்டாடப்படும் நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபென் ஹசாரிகா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“நமது காலத்தின் சிறந்த அரசியல்வாதி பிரணாப் முகர்ஜி. தேசத்திற்காக தன்னலமின்றி அயராது பணியாற்றியுள்ளார்.

மிகச்சிறந்த அறிவாற்றல் கொண்ட பிரணாப் முகர்ஜி பாரத ரத்னா விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கின்றது” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading