Local

புத்தளத்தில் கரையொதுங்கிய ஆண்கள் இருவரின் சடலங்கள்!

புத்தளம் மாவட்டம், கற்பிட்டி – நுரைச்சோலை, ஆராய்ச்சிகட்டு – முத்துபந்திய கடற்கரைகளில் இரு ஆண்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

புத்தளம் – நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுவ பகுதியில் நேற்று சடலமொன்று கரையொதுங்கியுள்ளது என நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான ​விசாரணைகளை நுரைச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஆராய்ச்சிக்கட்டு – முத்துபந்திய கடற்கரையில் இருந்து நேற்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் வெளிநாட்டவர் ஒருவருடையது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading