Lead NewsLocalNorth

காணாமல்போன மகளைத் தேடிய 3 மாவீரர்களின் தாயார் மாரடைப்பால் மரணம்!

காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையைத் தேடி அலைந்த – மூன்று மாவீரர்களின் தாயார், பிள்ளையைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் மாரடைப்பால் மரணமானார்.

மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச் சேர்ந்த வேலு சரஸ்வதி என்பவரே மரணமானவராவார்.

இவர் வீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் கணபதி, வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாராவார்.

கடற்புலிப் போராளியான சுவித்தா என்ற அவரது மகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். காணாமல் ஆக்கப்பட்ட மகளைத் தேடி அலைந்த நிலையில், அவர் நேற்றுமுன்தினம் மரணமானார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading