Local

அரசியல் கைதிகளுடன் பிரதி அமைச்சர்கள் பேச்சு!

கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு நேற்றுத் திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பிரதி அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் ஆகியோர் அங்கு அரசியல் கைதிகளைச் சந்தித்து அவர்களின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

நேற்றுத் திடீரென கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்குச் சென்ற பிரதி அமைச்சர்கள் மூவரும் அங்கு அரசியல் கைதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர்கள் அங்கு கூறினர் எனத் தெரியவந்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading