LocalUp Country

காணாமல்போன 17 வயது மாணவன் சடலமாக மீட்பு!

ஐந்து நாட்களாகக் காணாமல்போயிருந்த பாடசாலை மாணவன், அவரது வீட்டுக்கு மேலுள்ள கற்குகையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டிய, மாபகந்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த குறித்த மாணவனை கடந்த ஐந்து தினங்களாகக் காணவில்லை என நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading