LocalNorth

10 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் யாழில் இளைஞர் ஒருவர் கைது!

10 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியில் வைத்து நேற்றிரவு யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த இளைஞரைக் கைதுசெய்துள்ளனர்.

கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர், கஞ்சாப் பொதிகளை விற்பனைக்காகக் கொண்டு சென்றபோது பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading