Local

ரூ.30 கோடிக்கு விலை போன வியாழேந்திரன் வேண்டாம்! – மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்

30 கோடி ரூபாவுக்கு விலை போன வியாழேந்திரன் இனியும் வேண்டாம் என்று தெரிவித்து மட்டக்களப்பில் எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

“30 கோடி ரூபாவுக்கு விலை போன வியாழேந்திரன் இனியும் வேண்டாம், விலை போக எல்லோரும் வியாழேந்திரன் இல்லை, மட்டக்களப்பு மக்களின் மானத்தைப் போக்கிய அமலுக்கு (வியாழேந்திரனுக்கு) செருப்பு மாலை அணிவோம், ரணில் பக்கம் ஜனநாயகவாதிகள்; மஹிந்த பக்கம் கொலைகாரர்கள்” உள்ளிட்ட வாசங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திவாறு இந்த எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளித்து பிரதி அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading