LocalNorth

கிளிநொச்சி விபத்தில் வாகன சாரதி மரணம்!

கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வாகன சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் பூநகரி – பரந்தன் வீதியில் இடம்பெற்றுள்ளது.

பூநகரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிறிய வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதியே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளைப் பூநகரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading