Lead NewsLocalNorth

ரணில் நாளை யாழ். விஜயம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றார்.

நாளை இரவு ஐக்கிய தேசியக் கட்சியினரை யாழ்ப்பாணத்திலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் அவர் சந்திக்கின்றார்.

அத்துடன் மறுநாள் திங்கட்கிழமை சுன்னாகம் – கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக அவர் பங்கேற்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் அழைப்பின் பெயரில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த நிகழ்வில் கலந்துகொள்கின்றார்.

அத்துடன், ஐந்தரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் கலையரங்கத்துக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டி வைப்பார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.

அத்துடன், அன்றைய தினம் காரைநகருக்கும் பிரதமர் செல்கின்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading