Local

காதலுடன் இருந்த சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்ந்த அரசியல்வாதியின் சாரதி கைது!

மாத்தறைப் பகுதியில் 16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், மாத்தறை கடற்கரைப்பகுதியில், தனது காதலனுடன் குறித்த சிறுமி இருந்தபோது, தான் பொலிஸ் அதிகாரியெனக் கூறி, சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில், சிறுமியின் காதலன், பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, தென்பகுதி அரசியல்வாதி ஒருவரின் சாரதியை, மாத்தறைப் பொலிஸார் இன்று (23), கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading