LocalNorth

ரயிலிருந்து தவறி வீழ்ந்ததால் யாழ். இளைஞர் பரிதாப பலி!

வவுனியாவில் ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா, சாந்தசோலை சந்தியில் இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த ரயிலிலேயே இந்தப் பரிதாபச் சம்பவம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், மருதனார்மடத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்று அழைக்கப்படும் இளைஞரே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இளைஞரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading