Local

மஹிந்த பக்கம் அடிக்கிறது ஆதரவு அலை- – மற்றுமொரு ஐ.தே.க. எம்.பியும் தாவல்!

கொழும்பு அரசியலில் குத்துக்கரணமும், குதிரைப் பேரமும் சூடுபிடித்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஸ் கன்கந்த இன்று மஹிந்த பக்கம் தாவியுள்ளார்.


இவ்வாறு பல்டியடித்த அவர், சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு மஹிந்தவும், ரணிலும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், திடீர், திடீரென அரங்கேறும் தாவல்களால் அரசியல் களம் பரபரப்பாகவே காணப்படுகின்றது.

அதேவேளை, நாளையும், நாளை மறுதினமும் இருதரப்பிலிருந்தும் தாவல்கள் இடம்பெறும் அரச பரபரப்பாக பேசப்பட்டுவருகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading