LocalSports

இறுதிவரைப் போராடி வென்றது இங்கிலாந்து!

கிரிக்கெட்டைக் கண்டுபிடித்த இங்கிலாந்து முதன் முறையாக உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.

உலகக் கிண்ண 2019 கிரிக்கெட் தொடரில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

இதில், முதலில் ஆடிய நியூசிலாந்து, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்தும், 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 241 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின்னர் இடம்பெற்ற சுப்பர் ஓவரில், முதலில் ஆடிய இங்கிலாந்து 15 ரன்கள் எடுக்க, சேஸிங் செய்த நியூசிலாந்தும் 15 ஓட்டங்கள் எடுத்ததால், இந்தப் போட்டியில் அதிகம் பவுண்டரிகள் அடிக்கப்பட்டதன் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading