LocalNorth

சர்மிலா வினோதினியின் ‘மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும்’ நூல் அறிமுக நிகழ்வு நாளை மன்னாரில்!

ஈழத்தின் இளம் எழுத்தாளர் சர்மிலா வினோதினியின் மற்றொரு படைப்பான ‘மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும்’ என்கின்ற சிறுகதைத் தொகுப்பு நூலுக்கான அறிமுக நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு பூவரசி பதிப்பகத்தினூடாக சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கான அறிமுக நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுநிலை உயர்நீதிமன்ற நீதியரசருமாகிய சி.வி. விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.

நிகழ்வில் வவுனியா தேசிய கல்வியல் கல்லாரியின் உப பீடாதிபதி பொ. சத்தியநாதன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரியின் ஒய்வுநிலை கல்வியியலாளர் க.தர்மராசா மற்றும் ஓய்வுநிலை அதிபரும் எழுத்தாளருமான மணலாறு விஜயன் ஆகியோர் இந்த நூலைப் பற்றி உரையாற்றுவார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading