Local

யாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி தந்தை, மகள் மரணம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில் அதில் பயணித்த தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 6.45 மணியளவில் வேயங்கொட, வதுரவ ரயில் வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

45 வயதுடைய தந்தையும் 11 வயதுடைய மகளுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் வத்துபிட்டவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading