World

பாரிஸில் வெடிப்பு! 20 பேர் படுகாயம்!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 20 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர் என்று வௌிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading