Local

ஐ.ம.சு.முவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? – இன்னமும் முடிவில்லை என்கிறார் தினேஷ்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் சம்பந்தமாக இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொஸ்கம பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஒவ்வொரு கட்சியிலும் வெவ்வேறான கருத்துக்கள் நிலவுகின்றன. உடன்பாட்டு அடிப்படையில் தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும்.

அனைத்துத் தலைவர்களும் பல தடவைகள் இதனைக் கூறியுள்ளனர். அதன்படி இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

அதேநேரம் அரச பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைப்படி புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading