Lead NewsLocal

வௌ்ளவத்தையில் பதற்றம்! மர்ம மோட்டார் சைக்கிளை வெடிக்க வைத்தனர் பொலிஸார்!!

கொழும்பு, வௌ்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் இன்று வெடிப்புச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

சந்தேகத்துக்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்வதற்காகே இந்த வெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த மோட்டார் சைக்கிளைச் சோதனையிடுவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இதன்போது மோட்டார் சைக்கிளின் இருக்கை திறபடாமல் இருந்தது. உடனே பாதுகாப்புப் பிரிவினரை வரவழைத்த பொலிஸார், குறித்த மோட்டார் சைக்கிளை வெடிக்க வைத்தனர்.

எனினும், மோட்டார் சைக்கிளுக்குள் எவ்வித வெடிபொருட்களும் இருக்கவில்லை எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

இந்த வெடிப்புச் சத்தத்தால் வெள்ளவத்தை அதிர்ந்தது. அங்குள்ள மக்கள் பெரும் பதற்றமடைந்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading