நாடு கடத்தப்பட்ட நடிகர் ரயன் விசாரணையின் பின்னர் கைது!
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துர மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் விசாரணைகளின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நடிகர் ரயன் வேன் ரோயன் உட்பட நால்வர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டனர்.
அதன்பின்னர் நடிகர் ரயன் வேன் ரோயனிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து 18 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளை அடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட அவர் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

