Local

ஆர்ப்பாட்டப் பேரணியை தடுத்த பெண் பொலிஸார்!

ஜனாதிபதி செயலகம் வரை செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை, பெண் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி, தடுத்து நிறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரச பொறியியலாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டம், புறக்கோட்டை ரயில் நிலையத்திலிரந்து, ஜனாதிபதி செயலகம் வரை செல்ல முயன்ற போதே, வீதி தடைகளை ஏற்படுத்தி, பெண் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை ​முன்னோக்கிச் செல்லவிடாது தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இதற்கு முன்னரும் இவ்வாறான முயற்சியில், பெண் பொலிஸார் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading