Local

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொழுகை!

நாட்டிலுள்ள பள்ளிவாசல்களுக்கு முன்னால் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பிரதான இடங்களில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

பள்ளிவாசல்கள்மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் வெள்ளிக்கிழமையன்று ஜும்மா தொழுகைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முஸ்லிம் மக்கள சிலர் பள்ளிவாசல்களுக்கு சென்றனர்.

வழமைக்கு மாறாக விசாரணையின் பின்னரே உள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், வரிசையில் காத்திருந்ததையும் சில இடங்களில் காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக கொள்ளுப்பிட்டியிலுள்ள  பிரமாண்டமான மசூதிக்கு சென்றவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading