Lead NewsLocal

பள்ளிவாசலில் 46 வாள்கள் மீட்பு! – மௌலவி கைது

கொழும்பு, கொம்பனி வீதியிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் ஒன்றிலிருந்து இன்று 46 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பள்ளிவாசலில் பொலிஸார் நடத்திய விசேட தேடுதலின்போது மௌலவி அறையின் கட்டிலின் கீழ் இருந்து இவை மீட்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் குறித்த பள்ளிவாசலின் மௌலவி கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது அவரிடமிருந்து 15 கத்திகளும், இராணுவச் சீருடைக்கு இணையான 25 சீருடைகளும் மீட்கப்பட்டன. மௌலவியைத் தடுத்துவைத்துள்ள பொலிஸார், அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கொம்பனி வீதியில் உள்ள வீடொன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இராணுவச் சீருடைக்கு இணையான சீருடைகள் பல மீட்கப்பட்டுள்ளதுடன் இளைஞர் ஒருவரும் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading