Local

அமைச்சர்களின் பொறுப்புகள்: வர்த்தமானி அறிவிப்பு தாமதம்!

புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதும், அவர்களுக்கான அமைச்சுக்கள், பொறுப்புகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதை அடுத்து, 28 அமைச்சர்களும், நியமிக்கப்பட்டனர்.

அதன் பின்னர், அமைச்சரவையில் இடம்பெறாத அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.

எனினும், புதிய அமைச்சர்களுக்கான பொறுப்புகள், துறைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை.

இந்த வாரம் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், மேலும் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading