Local

GOTA GO HOME என்ற மக்களின் கோசத்தை  ஜனாதிபதி புரிந்த கொள்ள வேண்டும்!

அமைச்சரவை பொறுப்புகளை ஏற்குமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை ஜேவிபி நிராகரித்துள்ளது.

ஜேவிபி ஜனாதிபதியுடனோ பிரதமருடனோ குறுகிய கால இடைக்கால அல்லது அனைத்து கட்சி அரசாங்கத்திலோ  இணைந்துகொள்ளாது என அந்த கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
முதலில் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மக்களின் வேண்டுகோளை புரிந்துகொள்ளாத தலைவர் என குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய நெருக்கடி அமைச்சர்கள் பதவி தொடர்பானது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் ஜனாதிபதி அவ்வாறான யோசனைகைளை முன்வைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் கோட்டா கோ ஹோம் என்ற மக்களின் வேண்டுகோளை ஜனாதிபதி புரிந்துகொண்டு அதன்படி செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை பதவி விலகல் மூலம்  அரசாங்கம் நாடகமாடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading