Local

சுபநேரத்தில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோட்டா!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று சுபநேரமான காலை 9 மணியளவில் கையொப்பமிட்டார் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.

மிரிஹானவில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்களினால் மேற்கொள்ளப்பட்ட வழிபாடுகளுடனும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் ஆசீர்வாதத்துடனும் வேட்புமனுவில் அவர் கையொப்பமிட்டார்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை காலை வேட்புமனுவை கோட்டாபய தாக்கல் செய்யவுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading