Local

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு! – ‘குடு சூட்டி’ உயிருக்குப் போராட்டம்

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெல்வத்தைப் பகுதியில் இன்று (14) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மெல்வத்தைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஆஷா பாரி எனும் ‘குடு சூட்டி’ என்ற பெண்ணே துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பெண் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றார் எனவும், டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் கோஷ்டி முக்கியஸ்தர் பாஜியின் இரண்டாவது மனைவி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading