Sports

191 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி!

இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று ரி – 20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆபிரிக்கா சென்றுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் ஆரம்பமாகியது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆபிரிக்கா அணி 59.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும், ராஜித 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது.

அதனடிப்படையில் தென்ஆபிரிக்கா அணி 44 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் ஸ்டைன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading